மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு நடந்த மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
பலம் வாய்ந்த அணி என்று கூறப்பட்ட மும்பை அணி தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து, 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பிரண்ட் அபாரமாக விளையாடி 80 ரன்கள் எடுத்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த நிலையில், 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்கியது. 20வது ஓவரின் கடைசி பந்தில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இதையடுத்து, டெல்லி அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இதுவரை நடந்த போட்டிகளில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்று, குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது.
Edited by Siva