Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தடுப்பூசி போட்டுக் கொள்ள நிர்பந்திக்க கூடாது.. அவரவர் விருப்பம்தான்! – நீதிமன்றம் கருத்து!

Advertiesment
National
, வெள்ளி, 25 ஜூன் 2021 (10:59 IST)
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்துவது மனித உரிமை மீறல் என மேகாலயா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் மொத்த பாதிப்புகள் 3 கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால்தான் மாத சம்பளம் போன்ற கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன.

ஹரியானாவிலும் டாக்சி ஓட்டுனர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டதாக வழக்கு ஒன்று மேகாலயா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தற்போதைய கொரோனா பேரிடர் காலத்தில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம் என்றும், அதே சமயம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தலாமே தவிர அவர்கள் விருப்பமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ள கட்டாயப்படுத்துவது மனித உரிமை மீறலாகும் என தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்றே கடைசி... அரசு கொடுக்கும் ரூ.2,000 & 14 மளிகை பொருட்களை வாங்கியாச்சா?