ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இரண்டு வகையான தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளார்.
உலகில் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசிகள் இரண்டு அல்லது மூன்று தவணைகளாக செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரே வகையான தடுப்பூசிகள்தான் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்நிலையில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியை முதல் டோஸாகவும், மாடர்னா தடுப்பூசியை இரண்டாவய்து டோசாகவும் செலுத்திக் செலுத்திக் கொண்டுள்ளார்.
இரண்டும் வெவ்வேறு வகையில் கொரோனா வைரஸை எதிர்கொள்பவை. இவ்வாறு மாற்றி தடுப்பூசிகள் எடுத்துக் கொள்வது சம்மந்தமாக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஆனாலும் 66 வயதாகும் ஏஞ்சலா தைரியமாக தடுப்பூசிகளை மாற்றி எடுத்துக்கொண்டுள்ளார்.