இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்வது அதிகமாகியுள்ளது.
இந்நிலையில் மும்பையில் உள்ள உயர் நடுத்தர மக்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தடுப்பூசி முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பிரபலமான தனியார் மருத்துவமனையில் இருந்து வருவதாக சொல்லி அங்குள்ள மக்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளனர். ஒவ்வொரு ஊசிக்கும் சுமார் 1500 ரூபாய் வரை வசுலித்துள்ளனர். தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் இணையத்தில் அனுப்பப்படும் எனக் கூறி சென்றுள்ளனர்.
ஆனால் அவ்வாறு எல்லோருக்கும் சான்றிதழ் வரவில்லை. அப்படி வந்தவர்கள் சிலருக்கும் மருத்துவமனை பெயர் தவறாக அச்சிடப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் குறிப்பிட்ட மருத்துவமனையில் இதுபற்றி விசாரித்த போது தாங்கள் யாரையும் முகாமுக்கு அனுப்பவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் இப்போது புகார் கொடுத்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருகிறது. அவர்கள் போட்டது உண்மையிலேயே தடுப்பூசிதானா இல்லையா என்பதும் தெரியவில்லை.