ஹைதராபாத்தில் நட்சத்திர விடுதி ஒன்றில் உணவு ஆர்டர் செய்த மீரா சொப்ரா, அதில் புழுக்கள் நெளிவதை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
	
	
	பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை மீரா சோப்ரா. சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் உள்ள பிரபல டபுள்ட்ரீ என்ற ஸ்டார் உணவகத்தில் உணவு ஆர்டர் செய்திருக்கிறார். உணவை சாப்பிட்டவருக்கு அதிர்ச்சி. அவர் சாப்பிட்ட பிரட் சாண்ட்விச்சிலிருந்து புழு ஒன்று தட்டில் விழுந்து நெளிந்து கொண்டிருந்தது.
 
 			
 
 			
					
			        							
								
																	அதை உடனடியாக வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மீரா ”அதிக செலவு செய்து நீங்க இந்த உணவகத்தில் சாப்பிடுகிறீர்கள். ஆனால் இவர்கள் புழுக்களை சாப்பிட தருகிறார்கள். உணவு பாதுகாப்பு கழகத்தின் சான்றிதழ் பெற்ற ஹோட்டல் இது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கான விதிமுறைகள் என்னவாயின” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலர் மீராவுக்கு ஆதரவாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்கள்.