ப.சிதம்பரத்தின் மனு விசாரணை தள்ளிவைப்பு: சிபிஐ வைத்த செக்

புதன், 21 ஆகஸ்ட் 2019 (17:48 IST)
ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என உயர்நீதி மன்றம் மறுத்துள்ளது.

ஐஎனெக்ஸ் நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக அன்னிய முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மேல் விசாரணை நடத்த சிபிஐ, அமலாக்கப் பிரிவினர் முயன்று வருகிறார்கள்.

சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவினர் சிதம்பரத்தை கைது செய்ய முயன்று வருவதால் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார் சிதம்பரம். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதால் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டுமென சிதம்பரம் தரப்பில் ஆஜரான கபில் சிபல் கேட்டுக்கொண்டார். அந்த மனுவின் பிழை இருப்பதாக கூறி திருத்தங்கள் செய்ய சொல்லப்பட்டுள்ளது. மதியத்துக்கு மேல் மீண்டும் தொடங்கப்பட்ட அமர்வில் திருத்தங்கள் செய்யப்பட்ட ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

ஆனால் தலைமை நீதிபதி பார்வைக்கு வைக்காமல் மனுவை விசாரிக்க கூடாது என்பதால் மனு விசாரணையை தள்ளி வைக்க நீதிபதிகள் முடிவெடுத்தனர். அப்போது பேசிய கபில் சிபல் “ப.சிதம்பரம் தப்பி சென்றுவிட்டதாக கூறி சிபிஐ அதிகாரிகள் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பிவிட்டன. ஆதலால் இதை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்” என கேட்டு கொண்டுள்ளார்.

ஆனால் இன்றைய விசாரணை பட்டியலில் மனு இல்லாததாலும், தலைமை நீதிபதியின் பார்வைக்கு வைக்கப்படாததாலும் மனு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ப.சிதம்பரத்தின் மீதான கைது நடவடிக்கை எப்போது வேண்டுமானாலும் முடுக்குவிடப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் "அபிநந்தனை பிடித்த பாகிஸ்தான் சிப்பாய் இந்தியாவால் கொல்லப்படவில்லை"