உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனது அரசியல் வாரிசாக மருமகன் ஆகாஷ் ஆனந்த் என்பவரை பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்திருந்த நிலையில் அந்த பொறுப்பை அவரிடம் இருந்து பறித்து, அவருடைய தந்தைக்கு வழங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமாஜ் கட்சியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவி, மாயாவதியின் மருமகன் ஆகாஷ் ஆனந்துக்கு 2023 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, அவரை கட்சியின் பொறுப்பிலிருந்து நீக்கி, தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் அதே பொறுப்பை வழங்கினார்.
இந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக ஆகாஷ் ஆனந்தின் கட்சிப் பொறுப்பை அதிரடியாக மாயாவதி நீக்கியுள்ளார். அதற்கு பதிலாக, அவரது தந்தை ஆனந்த் குமார் என்பவருக்கு தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியை வழங்கியுள்ளார்.
மேலும், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, தனது அரசியல் வாரிசாக யாரையும் தெரிவிக்க போவதில்லை என்றும், தனது கடைசி மூச்சு இருக்கும் வரை கட்சி விவகாரங்களை தானே பார்த்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மாயாவதி திடீரென தனது மருமகனின் பதவியை மாற்றியிருப்பது, உத்தரப்பிரதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.