Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பதி கோவில் அருகே பயங்கர தீ விபத்து. லட்சக்கணக்கில் மதிப்பிலான பொருட்கள் நாசம்..!

Advertiesment
திருப்பதி

Mahendran

, வியாழன், 3 ஜூலை 2025 (11:33 IST)
திருமலையில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலின் அருகே ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து சுமார் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோவிலில் நேற்று இரவு திடீரென மின் கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டது.
 
இந்தத் தீ மளமளவெனப் பரவி, அருகில் இருந்த கடைகளுக்கும் பரவ தொடங்கியது. இதனால் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்தனர். நீண்ட நேரம் போராடித் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
 
இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். நள்ளிரவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதால், பக்தர்களுக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என்பது ஆறுதலான விஷயமாகும். இந்த தீ விபத்து திருப்பதிக்கு வந்த பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது: மாறுபட்ட தீர்ப்பை கொடுத்த இரண்டு நீதிமன்றங்கள்..!