அல்-பலாஹ் பல்கலை பேராசிரியர்கள் ஊழியர்கள் திடீர் மாயம்! பயங்கரவாதிகளுட்ன் தொடர்பா?

Mahendran
புதன், 19 நவம்பர் 2025 (12:42 IST)
ஹரியாணாவின் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-பலாஹ் பல்கலைக்கழகத்தில் பயங்கரவாத அமைப்புடன் சில பேராசிரியர்களுக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் திடீரெனக் காணாமல் போயுள்ளனர்.
 
காணாமல் போனதற்கு முன்னதாக, நவம்பர் மாத தொடக்கத்தில் இந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலர் பயங்கரவாத தொடர்புக்காக கைது செய்யப்பட்டனர். மேலும், நவம்பர் 10 அன்று டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பு தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட உமர் நபி என்பவரும், இதே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் என்பது தெரியவந்தது.
 
இதையடுத்து, பல பேராசிரியர்களும் ஊழியர்களும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்காமல் தலைமறைவாகிவிட்டனர்.
 
காணாமல் போனவர்களை உடனடியாக கண்டுபிடித்து விசாரணை நடத்த ஹரியாணா காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். பயங்கரவாத தொடர்பு வெளிப்பட்ட நிலையில் பலர் மாயமாகியிருப்பது அப்பகுதியில் பரபரப்பையும், பாதுகாப்பு அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதங்களாக ரிப்பேர் பார்த்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் இராணும். 'ஆபரேஷன் சிந்துார்' தாக்குதலின் வலிமை அப்படி..!

கால்பந்து விளையாடும்போது மோதல்.. சமாதானம் பேச சென்ற 19 வயது இளைஞர் கொலை..!

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தாரா திமுக பிரமுகர்: நயினார் நாகேந்திரன் கண்டனம்..!

இன்று நவம்பர் 19, சர்வதேச ஆண்கள் தினம்: கொண்டாட்டம் மற்றும் கவனம்!

எங்கள் போன்ற சினிமா துறையில் இருப்பவர்களுக்கு ஸ்கின் கேர் மிகவும் அவசியமான ஒன்று - பிரியா ஆனந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments