Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவை தூக்கி நிறுத்திய மன்மோகன் சிங்கின் முக்கிய திட்டங்கள்!

இந்தியாவை தூக்கி நிறுத்திய மன்மோகன் சிங்கின் முக்கிய திட்டங்கள்!

Prasanth Karthick

, வெள்ளி, 27 டிசம்பர் 2024 (10:10 IST)

இந்திய முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங், இந்திய பொருளாதார அறிஞராக, நாட்டின் பொருளாதார, மக்கள் வள மேம்பாட்டில் முக்கியமான பல திட்டங்களை செயல்படுத்தினார்.

 

 

இந்திய முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமனார். அவரது மறைவுக்கு அனைத்துக் கட்சி தலைவர்களும், உலக தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

மன்மோகன் சிங் ஆட்சி செய்த 2004 - 2014ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சில முக்கிய சட்டங்கள் மற்றும் திட்டங்கள்:

 

2005ல் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (NREGA) அறிமுகப்படுத்தப்பட்டது

 

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் வீடுகள் கட்டிக் கொள்ள ‘இந்திரா காந்தி அவாஸ் யோஜனா’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது

 

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் உரிமை சட்டம் 2009ல் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்பட்டது.

 

உணவு பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு அனைவருக்கும் உணவு தானியங்கள் வழங்குவது உறுதி செய்யப்பட்டது.

 

பிரதம மந்திர கிராமச் சாலை திட்டம் மூலமாக கிராமங்களில் சாலைகள் அமைக்கப்பட்டு அவை நகரங்களோடு இணைக்கப்பட்டன.

 

ஜனனி சுரக்‌ஷா யோஜனா என்ற குழந்தைப்பேறு பாதுகாப்பு திட்டம் கொண்டு வரப்பட்டு பிரசவிக்கும் தாய்மார்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

 

இந்தியாவில் உள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் அடையாள எண் வழங்கும் வகையில் ஆதார் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது.

 

2005ல் தகவல் அறியும் உரிமை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அரசின் பல்துறை செயல்பாடுகளிலும் மக்கள் அறிந்து கொள்ள வகை செய்யப்பட்டது.

 

மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உடன் அணு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இந்தியா தனது சிவில் மற்றும் ராணுவ அணு ஆயுத வசதிகளை பிரித்துக் கொள்வதன் மூலம், அமெரிக்கா இந்தியாவின் சிவில் அணு பயன்பாட்டிற்கான முழு ஒத்துழைப்பை வழங்கியது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீண்ட இடைவெளிக்கு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு..!