பங்கு சந்தை கடந்த சில நாட்களாக கடும் சரிவில் இருந்த நிலையில், நேற்று பங்கு சந்தை ஆரம்பத்தில் உயர்ந்தாலும் அதன் பின் படிப்படியாக சரிந்து, முந்தைய நாள் முடிவில் வர்த்தகம் முடிவடைந்தது.
இந்த நிலையில், இன்று பங்குச்சந்தை ஆரம்பத்திலேயே 500 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸ் ஏற்றம் கண்டுள்ளது, இது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 513 புள்ளிகள் உயர்ந்து 78,990 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 162 புள்ளிகள் உயர்ந்து 23,915 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஆசியன் பெயிண்ட், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பிரிட்டானியா, சிப்லா, எச்டிஎப்சி வங்கி, ஹீரோ மோட்டார், ஹிந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன. அதேபோல், இன்று அப்போலோ ஹாஸ்பிடல், அதானி போர்ட், எச்.சி.எல். டெக்னாலஜி, ஐடிசி உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தை உயர்ந்துள்ள நிலையில், அடுத்த வாரம் இதே நிலை நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.