Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மணீஸ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ராஜினாமா செய்த துறைகள் வேறு அமைச்சருக்கு ஒதுக்கீடு!

Advertiesment
Manish Sisodiya
, புதன், 1 மார்ச் 2023 (15:31 IST)
டெல்லி யூனியனில், புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரின் மணீஸ் சிசோடியாவை சிபிஐ கைது செய்துள்ள நிலையில், மணீஸ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் இருவரும் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அவர்களின் துறைகள் வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில்  மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இதனை அடுத்து அவர் நேற்று முன்தினம்  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நிலையில் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மணீஷ் சிசோடியா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம்  தலையிட மறுப்பு தெரிவித்ததோடு டெல்லி உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், இன்று டெல்லி சட்டப்பேரவையில், முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் உள்ள இரண்டு அமைச்சர்களான மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் ( பாஜக) ராம்வீர் சிங் பிதூரி தெரிவித்து, அமைச்சர்வையை மாற்ற வேண்டுமென்று கூறினார்.

இதையடுத்து, புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிக்கி கைதாகியுள்ள மணீஷ்சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் பதவியை நேற்று  ராஜினாமா செய்தனர்.

இவர்களின் ராஜினாமாவை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக் கொண்டார்.

இந்த நிலையில்,  ராஜினாமா செய்த மணீஸ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் கவனித்து வந்த துறைகள் வேறு அமைச்சருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கு நிதித்துறையும், அமைச்சர் ராஜ்குமார் ஆனந்துக்கு கல்வி உள்ளிட்ட துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விழுந்த வேகத்தில் உயரும் அதானி நிறுவனங்களின் பங்குகள்: முதலீட்டாளர்கள் ஆச்சரியம்..!