Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'மணிப்பூர் கலவரத்துக்கு காரணமே ப.சிதம்பரம் தான்..' முதல்வர் பைரன் சிங் அதிர்ச்சி தகவல்..!

Advertiesment
chidambaram

Siva

, புதன், 20 நவம்பர் 2024 (17:23 IST)
மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் அம்மாநில முதலமைச்சர் பைரோன் சிங் திறமையின்மை தான் என்றும், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்த நிலையில் மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் ப. சிதம்பரத்தின் முந்தைய செயல்பாடுகள் தான் என்று மணிப்பூர் முதலமைச்சர் பைரோன் சிங் பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது உள்துறை அமைச்சர் ஆக இருந்த ப. சிதம்பரம், மணிப்பூரில்  இபோபிசிங் முதல்வராக இருந்தார். அப்போது ப. சிதம்பரம் மியான்மர் நாட்டை சேர்ந்த தங்கலியன் பாவ் கைட் என்பவரை அழைத்து வந்தார். அந்த நபர் மியான்மர் நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவராவார்.

மணிப்பூரில் பதட்டமான சூழல் நிலவுவதற்கு அடிப்படை காரணமே சட்டவிரோதமாக இது மாதிரியான குடியேற்றங்கள் தான். இதற்கு காரணமாக இருந்தது அப்போதைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தான். அவர் தடை செய்யப்பட்ட இயக்க தலைவரை சந்தித்த புகைப்பட ஆதாரமும் இருக்கிறது என்று கூறி, அந்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

மணிப்பூர் முதல்வரின் இந்த திடுக்கிடும் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவம்பர் 25,26ல் கனமழை.. முந்தைய நாள் இரவில் விடுமுறை அறிவிப்பு.. அமைச்சர் அன்பில் மகேஷ்