Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராணுவத்தையே அடித்து விரட்டிய மணிப்பூர் மாணவர்கள்! கை மீறும் கலவரம்!

Advertiesment
Manipur Students Protest

Prasanth Karthick

, திங்கள், 9 செப்டம்பர் 2024 (14:40 IST)

மணிப்பூரில் மீண்டும் குய்கி - மெய்தி மக்களிடையே மோதல் வெடித்துள்ள நிலையில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தை கட்டுப்படுத்த வந்த சிஆர்பிஎஃப் வாகனங்களை மாணவர்கள் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Manipur Students Protest
 

மணிப்பூரில் குய்கி - மெய்தி இன மக்களிடையேயான மோதல் கலவரமாக வெடித்த நிலையில் கடந்த பல மாதங்களாக மணிப்பூரை கலவர மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்திய ராணுவ படைகள் மணிப்பூரில் புகுந்து நிலைமையை கட்டுப்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது குய்கி - மெய்தி இடையேயான மோதலில் ட்ரோன்கள், ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

சாதாரண மக்கள் கையில் நவீன ஆயுதங்கள் கிடைத்தது எப்படி என்ற அதிர்ச்சி கேள்வி எழுந்துள்ள நிலையில், மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் அனைத்து மணிப்பூர் மாணவர் யூனியன் (AMSU - All Manipur Students Union) போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்காக சிஆர்பிஎஃப் கான்வாய் வாகனம் வந்த நிலையில், மாணவர்கள் கற்கள், கட்டைகள் என பலவற்றை வீசி கான்வாயை தாக்கினர்.

 

இதனால் சிஆர்பிஎஃப் கான்வாய் பின்வாங்கியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மீண்டும் மணிப்பூரில் நிலைமை கையை மீறி சென்றுக் கொண்டிருப்பதால் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மணிப்பூரில் குகி - மெய்தேய் மீண்டும் மோதல்: டிரோன், ராக்கெட் லாஞ்சர்கள் கிடைத்தது எப்படி?