வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

Siva
வெள்ளி, 14 நவம்பர் 2025 (18:11 IST)
வந்தே பாரத் மற்றும் தேஜஸ் போன்ற அதிவிரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, 'உணவு வேண்டாம்' என்ற விருப்பத்தேர்வு நீக்கப்பட்டதால் பயணிகள் குழப்பமடைந்துள்ளனர். முன்பு தனித்தனியாக இருந்த இந்த விருப்பம் இப்போது நீக்கப்பட்டு, கட்டாயமாக ஒரு உணவு வகையை தேர்வு செய்தால்தான் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடிகிறது.
 
இதனால், தரமற்ற ரயில்வே உணவிற்காக பயணிகள் ஒருவருக்கு ரூ. 120 முதல் ரூ. 280 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த மாற்றம் குறித்து இந்திய ரயில்வே எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
 
உண்மையில், 'உணவு வேண்டாம்' என்ற விருப்பம், முன்பதிவு பக்கத்தின் கீழே 'I don’t want Food/Beverages' என்ற தலைப்பில் ஒரு செக்பாக்ஸாக மறைமுகமாக வைக்கப்பட்டுள்ளது. 
 
பெரும்பாலான பயணிகள் இதை பார்க்கத் தவறி, உணவு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக கருதி அதிருப்தி தெரிவிக்கின்றனர். பயணிகளுக்கு குழப்பம் ஏற்படாத வகையில், 'உணவு வேண்டாம்' விருப்பத்தை தெளிவாக வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒவைசிக்கு 6 தொகுதிகள் கொடுக்க மறுத்த இந்தியா கூட்டணி.. 6 தொகுதிகளிலும் ஒவைசி கட்சி முன்னிலை..!

மாடியில் இருந்து விமானங்களை புகைப்படம் எடுத்த 19 வயது இந்திய இளைஞர் மரணம்.. துபாயில் சோகம்..!

நிதிஷ்குமார் தான் முதல்வர்.. ஜேடியு-வின் 'X' தள பதிவு திடீரென நீக்கம்.. யார் முதல்வர்?

ராகுல் காந்தி யாத்திரை செய்த 110 தொகுதிகளிலும் காங்கிரஸ் பின்னடைவு! என்ன காரணம்?

சிறையில் இருந்தபடியே வெற்றி பெற்ற பீகார் வேட்பாளர்.. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments