தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில், லோகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லியோ.
இந்தாண்டு பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் லியோ படமும் ஒன்று. இந்த நிலையில், லியோ படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
சமீபத்தில், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் லியோ பட போஸ்டரை வெளியிட்டது படக்குழு. இது சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், லியோ படத்தின் ஃபேன்மேட் போஸ்டரை இயக்குனனர் லோகேஷ் கனகராஜ் ரசிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை நடிகர் விஜய் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.