Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல பாடகரின் பெயரில் பண மோசடி...ரசிகர்களுக்கு எச்சரிக்கை

Advertiesment
sonu nigam singer
, திங்கள், 31 ஜூலை 2023 (17:50 IST)
பாலிவுட் சினிமாவின் முன்னணி பாடகர் சோனு நிகம் பெயரில்  பண மோசடி நடைபெற்றுள்ளது.

பாலிவுட் சினிமாவின் முன்னனி பாடகர், இசையமைப்பாளர் என பன்முகங்கள் கொண்டவர் சோனு  நிகம். இவர் தமிழ், மராத்தி, குஜராத்தி, இந்தி என பல மொழிகளில் ஆயிரக்கணக்கான  பாடியுள்ளார்.

இந்தியாவின் பிரபல பாடகராகவும் அறியப்படும் சோனு நிகம்   பெயரில் பணமோசடி நடந்துள்ளது.

அதாவது, சமூக வலைதளங்களில் ஒரு பெண், பாடகர் சோனு நிகம் பெயரில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவர்,  ‘’பாடகரின் தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1500 பணம் அனுப்புபவர்களை சோனு நிகம் நேரில் சந்திப்பார்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மோசடி பற்றி தகவல் அறிந்த சோனு நிகம், ''இந்த மோசடி தகவலை யாரும் நம்பி ஏமாற வேண்டாம்'' என்று ரசிகர்களை எச்சரித்துள்ளார். இவர், விழியில் உன் விழியில், வாராயோ தோழி போன்ற பாடல்களை பாடியுள்ளார்.

சமீபத்தில், நடிகர் சல்மான்கான் பெயரில் பணம் மோசடி நடைபெற்றதை அடுத்து அவரும் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''மிகப் பெரிய சொத்து வாங்க முடிவு செய்துள்ளேன்''-விஷால் பட நடிகர் டுவீட்...ரசிகர்கள் அதிர்ச்சி