ஒரே நேரத்தில் 2 காதலிகளுக்கு தாலி கட்டிய வாலிபர்.. மணமகள்கள் மகிழ்ச்சி.!

Siva
வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (15:22 IST)
ஒரே நேரத்தில் இரண்டு இளம் பெண்களை காதலித்த வாலிபர் ஒருவர், ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கும் தாலி கட்டி மனைவியாக ஏற்றுக் கொண்ட சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.
 
தெலுங்கானா மாநிலத்தில் பழங்குடியின வாலிபர் ஒருவர், ஒரே நேரத்தில் இரண்டு இளம் பெண்களை காதலித்தார். நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இரண்டு பெண்களுக்கும் அவர் இருவரையும் காதலிப்பது தெரிய வந்தது.
 
இது குறித்து பெண்களின் பெற்றோர்கள் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், இளம்பெண்களின் முடிவை பஞ்சாயத்தார் கேட்டனர். அப்போது இரண்டு இளம் பெண்களும், ’நாங்கள் இருவருமே அவரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்வோம்’ என கூறியதை அடுத்து, வேறு வழி இல்லை என அனைவரும் ஒப்புக் கொண்டனர்.
 
இதனை அடுத்து, ஒரே மேடையில் தான் காதலித்த இரண்டு பெண்களுக்கும் ஒரே நேரத்தில் வாலிபர் தாலி கட்டினார். திருமணத்தில் அறுசுவை உணவு பரிமாறப்பட்டதாகவும், இரண்டு மனைவிகளுடன் அமர்ந்திருந்த மாப்பிள்ளைக்கு அந்த பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
 
மேலும், ’நாங்கள் இருவரும் கண்டிப்பாக அக்கா தங்கை போல் சந்தோஷமாக குடும்பம் எங்கள் கணவருடன் குடும்ப நடத்துவோம் என்று இரு மணமகள்களும் கூறியிருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவில் பிரசாதத்தில் ரசாயனம் கலக்க தீவிரவாதிகள் திட்டம்.. அண்ணாமலை அதிர்ச்சி தகவல்..!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.2400 உயர்வு..!

பங்குச்சந்தையில் முதலீடு என ரூ.10 கோடி ஏமாந்த வழக்கறிஞர்.. நூதன மோசடி

டெல்லி குண்டுவெடிப்பை பயமுறுத்தி மோசடி.. போலீஸ் போல் நடித்து மிரட்டல்...!

காருக்குள் சிக்கிய ஒட்டகம்.. 2 மணி நேரம் போராடி ஜேசிபி உதவியுடன் மீட்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments