Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமணமான 24 மணி நேரத்தில் விவாகரத்து செய்த கணவர்..நடந்தது என்ன??

Advertiesment
திருமணமான 24 மணி நேரத்தில் விவாகரத்து செய்த கணவர்..நடந்தது என்ன??
, புதன், 17 ஜூலை 2019 (16:30 IST)
உத்திரபிரதேசத்தில் திருமணமான 24 மணி நேரத்தில் மனைவியை விவாகரத்து செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் ஜகாங்கீராபாத் பகுதியைச் சேர்ந்த ஷாகே ஆலம், என்பவருக்கு, ருக்சனா என்பவருடன், கடந்த ஜூலை 13 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன் ஷாகே ஆலம் பெண் வீட்டாரிடம் பைக் ஒன்றை வரதட்சணையாக கேட்டுள்ளார். பெண் வீட்டார் அதற்கு ஒப்புகொண்டுள்ளனர். ஆனால், ஒப்புகொண்டபடி அவர்களால் பைக்கை கொடுக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆலம், ருக்சனாவை திருமணம் நடந்த 24 மணி நேரத்திலேயே இஸ்லாமிய முறைப்படி ”முத்தலாக்” கூறி விவாகரத்து செய்தார்.

கடந்த மோடி ஆட்சியின் போது முத்தலாக் தடை சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. மக்களவையில் மசோத நிறைவெறினாலும், மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால் மசோதா நிறைவேறாமல் நிலுவையில் இருந்தது. இதற்கிடையே மக்களவை கலைக்கப்பட்டதால் முத்தலாக் தடை சட்டம் காலாவதியானது.
இந்நிலையில் ஷாகே ஆலம், ருக்சனாவை முத்தலாக் கூறி விவாகரத்து செய்தது அவரது வீட்டாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து ருக்சனாவின் தந்தை, ஆலம் மற்றும் அவரது வீட்டாரின் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தில் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிந்தவுடன் உரிய நடைவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காருக்குள்ள யாரு? தலையை வெளிய நீட்டிய 15 அடி நீள பாம்பு!