Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உ.பி.யில் அதிகமாகும் கும்பல் படுகொலைகள் – புதிய சட்டம் !

Advertiesment
உ.பி.யில் அதிகமாகும் கும்பல் படுகொலைகள் – புதிய சட்டம் !
, வெள்ளி, 12 ஜூலை 2019 (13:59 IST)
சமீபகாலமாக உத்தரபிரதேச மாநிலத்தில் அதிகரித்தும் கும்பல் படுகொலைகளை தடுக்கும் வகையில் புதிய சட்டங்களை சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

சமீபகாலமாக பசுக்காவல் என்ற பெயரிலும் ஜெய் ஸ்ரீராம் முழக்க கும்பல்களாலும் தலித்கள் மற்றும் சிறுபான்மையினர் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது. இந்த படுகொலைகள் அதிகமாக உத்தரபிரதேச மாநிலத்தில்தான் அதிகமாக நடக்கின்றன. இதற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியேக் காரணம் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து இந்த கும்பல் படுகொலைகளை தடுக்க அம்மாநில சட்ட ஆணையம் சில கடுமையானப் புதிய சட்டங்களை மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இந்த சட்டங்களை உ.பி சட்ட ஆணையத்தின் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஆதித்யநாத் மித்தல் பரிந்துரை செய்துள்ளார்.

சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் :-
  • கும்பல் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்க்கு காயம் ஏற்பட்டிருந்தால் குற்றவாளிக்கு ஏழு ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்பட வேண்டும்.
  • தாக்கப்பட்டவர் படுகாயம் அடைந்தால் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.3 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்பட வேண்டும்.
  • தாக்கப்பட்டவர் உயிரிழந்தால் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்க வேண்டும்.
  • கும்பல் படுகொலைக்கு உடந்தையாகவும், தூண்டுதலாகவும் இருப்போருக்கும் குற்றவாளிக்கு வழங்கப்படும் அதே தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.
  • கும்பல் படுகொலை குற்றவாளிகள் மேல் நடவடிக்கை எடுக்காமல் கடமை தவறும் அதிகாரிகளுக்கு ஓராண்டு முதல் மூன்றாண்டு சிறைத்தண்டனையும், ரூ.5,000 வரை அபராதமும் விதிக்கப்பட வேண்டும்.
  • பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான சூழலை உருவாக்குவோருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யூனிஃபார்மில் பீச் டான்ஸ்!! சலக்கு சலக்குனு கலக்கும் பெண் போலீஸார்...