சாலையோரம் நின்றிருந்த காருக்குள் இருந்து 15 அடி நீள பாம்பு ஒன்று வெளியனதை கண்டு தீயணைப்பு வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் கொலரடோ மாகாணத்தில் உள்ள டென்வர் நகர் சாலையில், கார் ஒன்றில் அதன் உரிமையாளராக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் மயங்கி கிடப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் காருக்குள் யார் இருக்கிறார் என பார்க்க முயற்பட்ட போது 15 நீள் பாம்பு ஒன்று வெளியே வந்துள்ளது. முதலில் அதிர்ச்சி அடைந்த தீயணைப்பு துறையினர் பின்னர் பாம்பை மீட்டனர்.
காரின் உரிமையாளராக சந்தேகிக்கப்பட்ட நபர் குடிபோதையில் உறங்கிக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னர் வாகன ஓட்டிகள் குடிபோதையில் வாகனம் ஓட்ட வேண்டாம். குறிப்பாக செல்ல பிராணியான பாம்பு உள்ளிட்ட விலங்குகளுடன் பயணிக்க வேண்டாம் என எச்சரித்து டிவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளனர்.