போதையில் பசுவின் மடிகளை துண்டித்த நபர்.. பெங்களூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!
, திங்கள், 13 ஜனவரி 2025 (10:46 IST)
பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் மது போதையில் மூன்று பசுக்களின் மடிகளை துண்டித்ததாக வெளிவந்திருக்கும் தகவல், பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் காட்டன் பேட்டை பகுதியைச் சேர்ந்த சையது நஸ்ரு என்பவர், சாம்ராஜ் பேட்டை விநாயகர் நகரில் அதிகாலையில் பசுமாடுகளின் மடிகளை வெட்டி உள்ளதாக தெரிகிறது. அவர் மது போதையில் இருந்ததாகவும், இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
குற்றவாளியை உடனடியாக கைது செய்யாவிட்டால், கருப்பு சங்கராந்தி கடைபிடிக்கப்படும் என்று பாஜக அறிவித்ததை அடுத்தே, உடனடியாக இது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுத்தது. தற்போது காவல்துறையினர் மூன்று பசுக்களின் மடிகளை துண்டித்த நஸ்ரு என்ற நபரை கைது செய்திருப்பதாகவும், அவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் அசோகா கூறிய போது, இது ஜிகாதி மனநிலை என்றும், அரசு விரைந்து செயல்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பசுக்களின் உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய 5 லட்ச ரூபாய் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
இதனை அடுத்து, பசுவின் மடியை வெட்டிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா காவல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த கட்டுரையில்