Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

71 ஆண்டுகால அரசியலில் மாற்றம்: அதிரடி காட்டும் மம்தா பேனர்ஜி - சந்திரசேகர் ராவ்...

Advertiesment
71 ஆண்டுகால அரசியலில் மாற்றம்: அதிரடி காட்டும் மம்தா பேனர்ஜி - சந்திரசேகர் ராவ்...
, திங்கள், 19 மார்ச் 2018 (19:06 IST)
பாஜக, காங்கிரஸ் இந்த இரு தேசிய கட்சியை தவிர்த்து மூன்றாவது மாற்று கட்சியை உருவாக்கும் முயற்சியில் சந்திரசேகர் ராவ் மற்று மம்தா பேனர்ஜி ஈடுபட்டுள்ளனர். இது குறித்து ஆலோசிக்க இருவரின் சந்திப்பு இன்று நடந்தது. 
 
முதலில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், தேசிய அணிகளுக்கு மாற்று சக்தியாக மூன்றாவது அணி துவங்கப்பட வேண்டும் என கூறினார். இதர்கு மேற்க வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி ஆதரவு தெரிவித்தார். இந்நிலை இவரகளது சந்திப்பு இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது. 
 
சந்திப்பிற்கு பின்னர் சந்திரசேகர் ராவ் பின்வருமாறு பேசினார். பாஜக, காங்கிரஸுக்கு மாற்று தேவை. ஆகையால் 3 வது அணியை அமைக்க முயற்சித்து வருகிறோம். மேலும், இதர அரசியல் கட்சித் தலைவர்களையும் விரைவில் சந்திப்போம் என கூறினார்.
 
இது குறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது, 71 ஆண்டுகாலமாக நீடித்து வரும் அரசியல் போக்கை மாற்ற நினைக்கிறோம். மாநிலங்கள் வலுவாக இருந்தால்தான் மத்திய அரசு வலிமையாக இருக்கும். நமக்கு தேவை வலிமையான கூட்டணி ஆட்சி. வலுவான கூட்டணியை உருவாக்கும் பணிகளைத் துவங்கியுள்ளோம் என கூறினார்.
 
ஒருபக்கம் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத காரணத்தால் பாஜக மீது நம்பிக்கையில்லா தீர்மான கொண்டுவருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வரும் நிலையில், இவர்களது சந்திப்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காசநோயால் அவதிப்படும் நடிகை - சல்மான்கான் உதவுவாரா?