Publish Date: Mon, 19 Mar 2018 (18:23 IST)
Updated Date: Mon, 19 Mar 2018 (18:32 IST)
நடிகர் சல்மான்கானுடன் கதாநாயகியாக நடித்த பாலிவுட் நடிகை பூஜா தட்வால், காசநோயால் பாதிக்கப்பட்டு ஆதரவின்றி மருத்துவமனையில் அவதிப்பட்டு வருகிறார்.
நடிகை பூஜா தட்வால் வீர்காட்டி, ஹிந்துஸ்தான் உள்ளிட்ட சில இந்தி படங்களில் நடித்துள்ளார். வீர்காட்டி படத்தில் அவர் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகிய அவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். ஆனால், தற்போது அவர் மிகவும் வறுமையில் வாடி வருவதும், காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
காசநோயால் பாதிப்படைந்து மும்பை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை அவரின் கணவர் மற்றும் குடும்பத்தினர் கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது. எனவே, ஆதரவின்றியும், செலவிற்கு பணமின்றியும் அவர் தவித்து வருகிறார். மருத்துவமனைக்கு வருபவர்களில் சிலர் அவருக்கு உதவி வருவதாகவும் கூறப்படுகிறது.
அதேசமயம், நடிகர் சல்மான் கான் தனக்கு உதவுவார் என அவர் எல்லோரிடமும் கூறி வருகிறாராம்.