Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எதிரியை அழிக்க பரம எதிரியுடன் நட்பு: மம்தாவின் திட்டம் என்ன?

எதிரியை அழிக்க பரம எதிரியுடன் நட்பு: மம்தாவின் திட்டம் என்ன?
, செவ்வாய், 16 அக்டோபர் 2018 (16:42 IST)
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பாஜகவை வீழ்த்த கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நட்புகரம் நீட்டியுள்ளார். 
 
சமீபத்தில் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் உட்பட 5 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் அகிலேஷ், மாயாவதி மற்றும் சரத்பவார் ஆகியோரின் கட்சிகள் காங்கிரஸுடன் சேராமல் தனித்து போட்டியிடுகின்றன. 
 
இந்த நிலையை சமாளிக்க சில பல முயற்சிகளில் தீவிரமாகி இறங்கியுள்ளார் மமதா பானர்ஜி. அதன்படி, கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் அடுத்த வருடம் ஜனவரி 19 ஆம் தேதி திரிணமூல் காங்கிரஸின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. 
 
இந்த பொதுக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புரட்சிகர சோஷ லிஸ்ட் கட்சி மற்றும் பார்வர்டு பிளாக் ஆகிய இடதுசாரிக் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு விடுத்துள்ளார். 
 
இடதுசாரிக் கட்சிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மம்தாவுக்கு அரசியல் எதிரிகள். இருப்பினும் மம்தா இவர்களுடன் நட்பை புதுப்பிக்க நினைப்பது பாஜகவை வீழ்த்தவே என்பது தெளிவாக தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைனில் பட்டாசு விற்பனை : தடைவிதித்த உயர் நீதிமன்றம்....