Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆன்லைனில் பட்டாசு விற்பனை : தடைவிதித்த உயர் நீதிமன்றம்....

ஆன்லைனில் பட்டாசு விற்பனை : தடைவிதித்த  உயர் நீதிமன்றம்....
, செவ்வாய், 16 அக்டோபர் 2018 (16:18 IST)
ஷேக் தாவூத் என்பவர் ஆன்லைனில் பட்டாசுகள் விற்பனை செய்யக்கூடாது எனவும் இதனால் தமிழ் நாட்டில் குறிப்பாக சிவகாசியில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசு தொழில்கள் பாதிக்கப்படுவதுடன் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நவம்பர் 6 ஆம்தேதி தீபாவளி கொண்டாடப்படுகின்ற நிலையில் நவம்பர் 15 க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார்.

இது பற்றி உயர் நீதிமன்ற நீதிபதி குறிப்பிடும் போது வெடிபொருள் விற்ப்னைக்கான விதிகள் ஆன்லைனில் முறையாக பின்பற்றப்படுபதில்லை என்று கூறியுள்ளது.
 
மேலும் வெடிப்பொருள் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி உள்ளிட்டோர் இதுகுறித்து பதிலளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
ஆன்லைனில் நிறுவனங்கள் மூலம் அதிகளவில் சீனப் பட்டாசுகள் விற்கப்படுவதாக மனுதாரர் குற்றம் சாடியிருந்த நிலையில், தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகளை விற்பனை செய்யும் நோக்கில்தான் ஆன்லைனில் பட்டாசுகளை விற்க அனுமதி கேட்டிருக்கின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
உள்நாட்டில் குறிப்பாக சிவகாசி யில் அதிகளவிலான பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படும் நிலையில் தற்போது உள்நாட்டு உற்பத்தியை பாதிக்கௌம் விதத்தில் இந்த ஆன்லைன் விற்பனையை நீதிமன்றம் ஆதரிக்குமா? இல்லை ஏழைக்குடிசை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவன தீர்ப்பளிக்குமா? என்ற  இந்த வழக்கின் உண்மை தன்மை வரும் நவம்பர் 15 ம் தேதி தெரிந்துவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்லூர் ராஜு மட்டுமே நன்றியுள்ளவர்: நெகிழும் டிடிவி தினகரன்