ஆபரேஷன் சிந்தூரை அரசியலாக்க வேண்டாம்.. மோடிக்கு மமதா பானர்ஜி பதிலடி..!

Siva
வியாழன், 29 மே 2025 (17:59 IST)
திரிணமூல் காங்கிரஸ்  அரசை கடுமையாக விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  பதிலடி கொடுத்துள்ளார்.
 
எதிர்க்கட்சித் தலைவர்கள் தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ஒருமித்த அணியாக வெளிநாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி பேசிக் கொண்டிருக்கையில், மோடி தீவிரவாத பிரச்சனையை தனது அரசியலுக்கு பயன்படுத்துவது மிகவும் வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.
 
அனைத்து எதிர்க்கட்சிகள் சேர்ந்து வெளிநாடுகளில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதத்தை வெளிக்கொணர முயற்சிக்கின்றன. அதே சமயம், மோடிஜி அரசியல் லாபத்திற்காக மேற்கு வங்க அரசை குறிவைக்கிறார். 
 
‘ஆபரேஷன் பெங்கால்’ போன்ற புதிய வார்த்தைகள் உருவாக்கி மக்களின் கவனத்தை திருப்ப முயல்கின்றனர். தைரியம் இருந்தால் நாளையே தேர்தலுக்கு வாருங்கள். வங்காளம் தயாராக இருக்கிறது என எச்சரித்தார்.
 
மத்திய அரசு ‘ஆபரேஷன் சிந்தூர்’ஐ அரசியலாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டு கொண்டார்.
 
நாங்கள் எப்போதும் தேசிய பாதுகாப்புக்காக மத்திய அரசை ஆதரித்து செயல்பட்டோம். அதே ஒத்துழைப்பை மத்திய அரசிடம் நாங்கள் எதிர்பார்க்கிறோம். தேசிய விஷயங்களை அரசியல் ஆக்க வேண்டாம். நாங்கள் நமது  நாட்டை பாதுகாக்க முயல்கிறோம். இந்த நேரத்தில் அதை குறைந்தபட்சம் மதியுங்கள்,” எனவும் மம்தா கூறினார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விண்வெளி ஆய்வுகளில் போட்டியை விட ஒத்துழைப்பின் மூலமே அதிகம் சாதிக்கலாம்! - சுனிதா வில்லியம்ஸ் - சத்குரு உரையாடல்!

இந்தா வந்துட்டாப்ல! வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி? - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

சென்னை உள்பட 30 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

டிசம்பர் முதல் புதிய விண்ணப்பதாரர்களுக்கு உரிமைத்தொகை! - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: எத்தனை சதவீதம்? தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments