கேரளா நடிகை ரிணி ஆன் ஜார்ஜ், ஒரு அரசியல் கட்சியின் இளைஞர் அணி தலைவர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார். அவர் பலமுறை தனக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், ஒருமுறை தன்னை ஒரு ஹோட்டலுக்கு அழைத்ததாகவும் ரிணி குற்றம் சாட்டியுள்ளார்.
தான் புகார் அளித்த பிறகும் அந்த தலைவர் தொடர்ந்து தனக்கு தொல்லை கொடுத்ததாகவும், அவரது குடும்பத்தில் உள்ள பெண்கள் உள்பட பல பெண்களும் இதே போன்ற அனுபவங்களை சந்தித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். "தங்கள் குடும்ப பெண்களைப் பாதுகாக்க முடியாத இந்த அரசியல்வாதிகள் வேறு எந்த பெண்ணைப் பாதுகாப்பார்கள்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நடிகை ரிணி அந்தத் தலைவரின் பெயரை வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் அவர் ஒரு காங்கிரஸ் பிரமுகர் தான் என பாஜகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த சம்பவம் கேரள அரசியலிலும், திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.