Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

Advertiesment
மத்தியப் பிரதேசம்

Mahendran

, வியாழன், 7 ஆகஸ்ட் 2025 (17:50 IST)
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் 100 ஹெக்டேர் பரப்பளவில் கணிசமான அளவு தங்க இருப்புகள், தாமிரம் மற்றும் பிற கனிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு இந்தியாவுக்கான ஜாக்பாட் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
சிஹோரா தாலுக்காவில் உள்ள மகங்வா பகுதியில் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட மாதிரி சேகரிப்பு மற்றும் ஆய்வுகளுக்கு பிறகு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த பகுதி ஏற்கனவே இரும்பு மற்றும் மாங்கனீசு இருப்புகளுக்குப் பெயர் பெற்றது.
 
ஆரம்பக்கட்ட ஆய்வுகளின்படி, தங்க இருப்புகள் சுமார் 100 ஹெக்டேர் பரப்பளவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதன் மூலம், தங்கத்தின் அளவு பல லட்சம் டன்கள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.
 
இந்த கணிப்பு உண்மையானால், ஜபல்பூர் இந்தியாவின் கனிம வளம் நிறைந்த பகுதிகளில் ஒன்றாக மாறும். இது அப்பகுதியின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.
 
சமீபத்திய ஆண்டுகளில் மத்திய இந்தியாவில் நடந்த மிக முக்கியமான கனிமக் கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்றாகும்.  தங்க படிவுகளை வெட்டி எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை தீர்மானிக்க, அடுத்த கட்டமாக விரிவான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!