கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை, இன்று ஒரே நாளில் உச்சத்தை அடைந்துள்ளது. இது, நகை வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.75 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.600 அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.2,000 அதிகரித்துள்ளது.
இந்த விலை உயர்வு, திருமண நகைகள் மற்றும் சேமிப்புக்காகத் தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்க, வெள்ளி விலை குறித்த தகவலை பார்ப்போம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,295
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,370
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 74,360
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 74,960
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,140
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,221
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 81,120
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 81,768
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.125.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.125,000.00