மகாராஷ்டிரா மாநிலத்தில் பயணிகள் ரயில் ஒன்றில் இருந்த ஐந்து ரயில் பெட்டிகள் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 			
 
 			
					
			        							
								
																	மகாராஷ்டிரா மாநிலத்தில் அகமத்நகர்  என்ற மாவட்டத்தில் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயில், நாரயன்தோ ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது திடீரென ரயில் பெட்டிகளில் தீப்பிடித்தது. இந்த தீ ஒவ்வொரு பெட்டியாக பரவி மொத்தம் ஐந்து பெட்டிகளில் எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் தீ பரவும் முன்பே பயணிகள் அனைவரும் ரயில் பெட்டிகளில் இருந்து இறங்கி விட்டதால்  அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை என்று முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் இந்த தீ விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து ரயில்வே துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். பயணிகள் ரயிலின் 5 பெட்டிகள் தீயில் எரிந்து நாசமான  சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.