மஹாராஷ்டிரம் மாநிலத்தில் முதல்வர் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
இம்மாநிலத்தின் மும்பை கோரிகான் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர். 39 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மீட்புப் பணிகளின்போது, தீக்காயங்களுடன் 46 பேர் மீட்கப்படு மருத்துவமனைககளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 7 பேர் பகியாகியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், ஜெய் பவானி கட்டடத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீப்பற்றியதாகவும், இது அருகில் உள்ள கட்டங்களுக்கும் இந்த தீ பரவியதாக கூறப்படுகிறது.