Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேருந்தின் பின்பக்க கம்பியை பிடித்தபடி ஸ்கேட்டிங் செய்த வெளிநாட்டவர்

Advertiesment
coimbatore
, வியாழன், 6 அக்டோபர் 2022 (18:26 IST)
கோவையில்  வெளி நாட்டுப் பயணி ஒருவர் அரசுப் பேருந்தைப் பிடித்தபடி ஸ்கேட்டிங் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் சமீப காலமாக பைஸ் ஸ்டண்ட், பைக் ரேஸ், போன்ற சம்பவங்கள் பொதுமக்களுக்கும் ,வாகன ஓட்டிகளுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், இன்று கோவை மாவட்டம் அவி நாசி பிரதான சாலையில் ஒரு அரசுப் பேருந்திற்குப் பின்  ஸ்கேட்டிங் செய்து கொண்டிருந்த வெளி நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர், அந்தப் பேருந்தின் ஏணிப்படியைப் பிடித்தபடி சென்றார்.

இதைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்ததுடன் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அவர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சமீபத்தில், பள்ளி மாணவன் ஒருவர், பேருந்தின் ஜன்னலைப் பிடித்து ஸ்கேட்டிங் செய்ததால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபோன் 13 ஆர்டர் செய்த நபருக்கு அடித்த ஜாக்பாட்: பிளிப்கார்ட் வினோத டெலிவரி!