சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் மாவட்டத்தில் இன்று ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் பலியாகினர்.
சத்திஸ்கர் மா நிலத்தில் முதல்வர் பூபேஸ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.
இங்குள்ள கான்கர் மாவட்டத்தில் இன்று பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது.
கோரல் சில்கத்தி சவுக் என்ற பகுதியில் சென்றபோது, ஆட்டோ மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், ஆட்டோவில் பயணித்த 7 பள்ளிக் குழந்தைகள் பலியாகினர். ஒரு குழந்தை பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.
இவ்விபத்திற்கு முதல்வர் பூபேஸ் பாகல் இரங்கல் தெரிவித்துள்ளார்.