நிலநடுக்கம் காரணமாக துருக்கி நாடே ஐந்து முதல் பத்து மீட்டர் வரை நகர்ந்துள்ளதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நிகழ்ந்த துருக்கி நிலநடுக்கம் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதும் 17,000 அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீட்பு படையினர் 24 மணி நேரமும் மீட்பு பணியை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக நிலப்பரப்புக்கு கீழே உள்ள ஒரு தட்டு மேற்கு நோக்கியும் மற்றொரு தட்டு கிழக்கு நோக்கியும் நகர்ந்து உள்ளதாகவும் இதனால் துருக்கி நாடு ஐந்து முதல் பத்து மீட்டர் வரை நகர்ந்து இருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
4 தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அதனால் தான் பல கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்துள்ளதாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கம் காரணமாக துருக்கி 5 முதல் 10 மீட்டர் வரை நகந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.