Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஷவாயு விவகாரம்… எல் ஜி பாலிமர்ஸ் நிறுவனம் மீது அதிரடி நடவடிக்கை!

விஷவாயு விவகாரம்… எல் ஜி பாலிமர்ஸ் நிறுவனம் மீது அதிரடி நடவடிக்கை!
, திங்கள், 25 மே 2020 (15:21 IST)
மே 7 ஆம் தேதி ஸ்டைரின் என்ற விஷவாயு வெளியாகி 12 பேரை பலிகொண்ட எல் ஜி பாலிமர்ஸ் என்ற நிறுவனம் மூடப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் எல் ஜி பாலிமர்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்த ஆலை ஒன்றில் திடீரென மே 7 ஆம் தேதி ஸ்டைரீன் என்ற வாயு காற்றில் கலந்து 5 கிமீ தூரத்துக்குப் பரவியது. இதனால் அந்த பகுதியில் உள்ள 12 பேர் பலியாகினர். அதுமட்டுமில்லாமல் 100 கணக்கான கால்நடைகளும் பலியாகினர். பல மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதால் சம்மந்தப்படட் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு சம்மந்தமான கடந்த வார விசாரணையில் “நிறுவனம் முழுவதுமாக கைப்பற்ற படவேண்டும் என்றும் நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட யாரும் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது’ என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நிறுவனத்தின் உள் உள்ள சொத்துகள் அனைத்தும் அப்படியே இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று எழுத்துப் பூர்வமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தொழிற்சாலை இழுத்து மூடப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழிசை போன் கால்; ஈபிஎஸ் நேரடி விசிட்: ஓபிஎஸ் எப்படி இருக்கிறார்??