ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனது கிராம சுற்றுப்பயண நிகழ்ச்சியான பல்லேபாட்டாவை விரைவில் துவங்கவுள்ளார்.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வர் பதவிக்கு வந்ததிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக சமீபத்தில் எதிர்கட்சியின் கடும் எதிஎப்புக்கு மத்தியில் ஆந்திராவுக்கு 3 தலைநகரங்களுக்கான மசோதாவை நிரைவேற்றினார்.
இதனை தொடர்ந்து 3 தகைநகர மசோதா ஆந்திரா சட்ட சபையில் உள்ள மேல் சபையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், ஆந்திர மேல் சபையில் ஜெகன் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் 3 தலைநகர மசோதா நிறைவேற்றப்படுவதற்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் மேல் சபையையே கலைத்துவிட்டார்.
ஆட்சிக்கு வந்ததும் முக்கிய திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டதால் ஜெகன் மோகன் ரெட்டி தனது கிராம சுற்றுப்பயண நிகழ்ச்சியான பல்லேபாட்டாவை பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் துவங்க உள்ளார்.
தனது அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் பெரும்பாலானவை மக்களை போய் சேர்ந்துவிட்டதா என தெரிந்துக்கொள்ளவும், இன்னும் மக்கள் தன் அரசிடம் இருந்து என்ன எதிர்ப்பார்க்கிறார்கள் என தெரிந்துக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.