Publish Date: Sat, 18 Apr 2020 (10:01 IST)
Updated Date: Sat, 18 Apr 2020 (10:12 IST)
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.
கடந்த மாதம் முதலாக இந்தியாவில் தீவிரம் காட்ட தொடங்கிய கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் கொரோனா உள்ளதா இல்லையா என விரைவில் கண்டுபிடிக்க ரேபிட் டெஸ்ட் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், தென்கொரியாவில் இருந்து ஆந்திர மாநில அரசு சார்பில் சுமார் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் வாங்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டி, ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்ததாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.