Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரள சிறுமியின் மனிதநேயமிக்க செய்த செயல் – குவியும் லைக்ஸ் !

கேரள சிறுமியின் மனிதநேயமிக்க செய்த செயல் – குவியும் லைக்ஸ் !
, செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (10:55 IST)
கேரளாவில் கடந்த சில வாரங்களாக தொடர்மழை பெய்து பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரப்பணிகளுக்கு கேரளமக்களிடம் நன்கொடைப் பெறப்பட்டு வருகிறது.

கேரளாவில், கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து நீடித்துவருகிறது. இதனால் கேரளாவின் பெரும்பாலானப் பகுதிகள் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளத்தால் இதுவரை 50 பேஎ வரை உயிரிழந்துள்ளனர். வீடுகளை இழந்தோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து நிவாரணப்பணிகளுக்காக மக்களிடம் இருந்து நன்கொடைகள் பெறப்பட்டு வருகின்றன. கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்த சி.பி.எம் தலைவர்களில் ஒருவருமான ஸ்ரீமதி, தன் வளையல்களை நன்கொடையாகக் கொடுத்து இதுபோல மற்றவர்களும் உதவ வேண்டும் என தங்க சேலஞ்ச் என்ற திட்டத்தை அறிவித்தார். இதனையடுத்துப் பலரும் தங்கமாக நன்கொடைகளைக் கொடுத்து வருகின்றனர்.

கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்த சிறுமி லியானா தேஜுஸ் தனது உண்டியல் பணம் முழுவதையும் நன்கொடையாக கொடுத்தார். மேலும் நேற்ற்ய் எர்ணாகுளத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்காக கலந்துகொள்ள வந்த முதல்வர் பினராயி விஜயனிடம் தான் காதில் அணிந்திருந்த தங்க தோட்டையும் கழட்டிக் கொடுத்து அனைவரையும் நெகிழ வைத்தார். இந்த சம்பவத்தால் அந்த மாணவிக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலியைக் கொன்று சமைத்து சாப்பிட்ட கொடூரன் – அமெரிக்காவில் நடந்த பயங்கரம் !