தென் மேற்குப் பருவ மழை அதிகமாக இருப்பதால் கேரளாவின் சில பகுதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதை தமிழகம் மற்றும் கேரள மாநில எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பொழிந்து வருகிறது. மழை அடுத்து வரும் நாட்களில் இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கேரளாவின் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மலப்புரம் பகுதிகளில் ஜூலை 18, 19, 20 ஆகிய தேதிகளிலும், வயநாடு, கண்ணூர் பகுதிகளில் ஜூலை 19 ஆம் தேதியிலும், எர்ணாக்குளம் மற்றும் திரிசூர் மாவட்டங்களில் ஜூலை 20 ஆம் தேதிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கேரள முதல்வர் பின்ராயி விஜயன் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.