Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரளாவில் இன்று 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு!

கேரளாவில் இன்று 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு!
, ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (19:34 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு இருந்து வந்ததை அடுத்து இன்று 20 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது 
 
கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,240 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 29,710 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 67 என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது
 
மேலும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 22,551 என்றும் கொரோனாவால் குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 41,30,065 என்றும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை 2,22,255 என்றும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று ஒரேநாளில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி: முகாம் தொடரும் என அறிவிப்பு