நடிகர் விஜய்யுடன் பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக அறிமுகமானார் நடிகர் ஜெய்.
பகவதி படத்தில் அறிமுகம் ஆகி இருந்தாலும் ஜெய்க்கு அடையாளம் கிடைத்தது சென்னை 28 மற்றும் சுப்ரமண்யபுரம் போன்ற படங்களில்தான். அதன் பிறகு பிஸியாக கதாநாயகனாக ஒரு சுற்று வந்தார். இப்போது மிகவும் தேர்வு செய்து படங்களை நடித்து வருகிறார். ஆனாலும் முன்பு அவருக்கு இருந்த ஒரு க்ரேஸ் இப்போது இல்லை.
இந்நிலையில் இப்போது அவர் அளித்த ஒரு நேர்காணலில் பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்தேன். அதன் பின்னர் ஒரு 150 முறையாவது மீண்டும் அவரோடு நடிக்க வேண்டும் எனக் கெஞ்சிவிட்டேன். ஆனால் அவரோ நீதான் ஹீரோவாய்ட்டியே என சொல்லி நிராகரித்துவிட்டார் எனக் கூறியுள்ளார்.