இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் ஐந்தாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அடுத்து பந்துவீச்சு பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர் மற்றும் பிசியோதெரபி ஆகிய மூவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் வீரர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இவர்களுக்கு கொரோனா தொற்று வரக்காரணம் கடந்த வாரத்தில் அவர்கள் ஒரு புத்தக அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்டதுதான் என சொல்லப்படுகிறது. பயோ பபுளில் இருக்கும் நிலையில் அவர்கள் கூட்ட நெறிசல் உள்ள நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு பிசிசிஐ அவர்கள் மேல் அதிருப்தியில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது சம்மந்தமாக ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இங்கிலாந்து முழுவதும் திறந்துதான் கட்டுப்பாடற்று இருக்கிறது. கொரோனா தொற்று ஏற்பட வேண்டும் என்றால் முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஏற்பட்டிருக்கும். கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் எனக்கு முக்கியமானது இல்லை எனக் கூறியுள்ளார்.