கேரளாவில் சமீபத்தில் ஓணம் பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், ஓணம் பண்டிகையை ஒட்டி 12 நாட்களில் 818.21 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கேரளா அரசின் மதுபானங்கள் கார்ப்பரேஷன் லிமிடெட் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையின் போது 809 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில், இந்த ஆண்டு 9 கோடி ரூபாய்க்கு அதிகமாக விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை 10 நாட்கள் நடக்கின்றது. இந்த பத்து நாட்களிலும் கேரள மக்கள் மிகச் சிறப்பாக ஓணம் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில், 12 நாட்களில் மது விற்பனை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 6ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரையிலான 12 நாட்களில் மட்டும் 818.21 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகி உள்ளதாக கூறப்படுவது அரசுக்கு வருமானமாக இருக்கலாம். ஆனால், சமூக நல ஆர்வலர்கள் இதனை வருத்தத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.