Publish Date: Sun, 15 Sep 2024 (10:00 IST)
Updated Date: Sun, 15 Sep 2024 (10:03 IST)
கேரள மாநிலத்தில் இன்று ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் மலையாளத்தில் ஓணம் வாழ்த்துக்கள் கூறிய செய்துள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
“உலகெங்கிலும் உள்ள எனது மலையாள சகோதர சகோதரிகளுக்கு இதயம் கனிந்த ஓணம் வாழ்த்துக்கள்! பெரும் இயற்கைப் பேரிடரின் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் கேரளாவில் உள்ள எனது திராவிட சகோதர சகோதரிகளுக்கு இந்த பண்டிகை காலம் நம்பிக்கையையும் வலிமையையும் தரட்டும். இந்த ஓணம் மலையாளிகளின் ஒற்றுமையை அவர்கள் வாழ்வில் பிரதிபலிக்கட்டும்!” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
மேலும் உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரை உலக பிரபலங்களும் பல அரசியல் கட்சி தலைவர்களும் பொதுமக்களும் கேரள மக்களுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.