கேரளாவில் ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஊரடங்கில் புதிய தளர்வுகளை கேரள அரசு அறிவித்தது.
இந்தியா முழுவதும் கடந்த மாதத்தில் இரண்டாம் அலை தீவிரமடைந்திருந்த நிலையில் தற்போது வெகுவாக குறைந்தது. இந்நிலையில் தற்போது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.
இதனால் கேரளாவில் ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஊரடங்கில் புதிய தளர்வுகளை கேரள அரசு நேற்று அறிவித்தது. அதன்படி,
1. கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி வணிக வளாகங்களை வரும் 11 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2. ஏசி இல்லாத ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
3. மாநிலத்தில் தற்போது ஞாயிற்றுக் கிழமைகளில் அமலில் உள்ள முழு ஊரடங்குக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
4. பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு கொரோனா கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டு செல்ல இன்று முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
5. சுற்றுலா பயணிகள் கடற்கரைகளுக்கு செல்ல தடையில்லை. அதே சமயம், நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்கு அனுமதியில்லை.
6. சுற்றுலா வருபவர்கள் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்து இரு வாரங்கள் ஆகியிருக்க வேண்டும்.
7. அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.