Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோனி உடலில் பாய்ந்த 15 துப்பாக்கி குண்டுகள்! – அதிர்ச்சி தகவல்!

Advertiesment
Pakistan Bullets
, வெள்ளி, 27 ஜனவரி 2023 (09:31 IST)
கேரளாவின் பாலக்காடு பகுதியில் பெரும் அச்சுறுத்தலாக இருந்த தோனி யானையின் உடலில் 15 துப்பாக்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் வயநாடு, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள நிலையில் சில சமயங்களில் மனிதர்கள் வாழும் பகுதிக்குள் யானைகள் புகுந்து விடுவதும், உயிரிழப்பு அசம்பாவிதங்களும் நடந்து விடுகின்றன.

சமீபமாக அவ்வாறு பாலக்காடு பகுதியில் ஒற்றை காட்டு யானையான தோனி அட்டகாசம் செய்து வந்தது. கடந்த சில வாரங்களாக பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த தோனியை சமீபத்தில் வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர். அதை முகாமுக்கு கொண்டு சென்ற நிலையில் அதன் உடலில் இருந்து சுமார் 15 துப்பாக்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

webdunia


இவை நாட்டுத்துப்பாக்கி மற்றும் ஏர்கன் வழியாக சுடப்பட்ட குண்டுகள் என கூறப்படுகிறது. யானையை விரட்ட சிலர் இவ்வாறு துப்பாக்கியால் யானை மீது சுட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இவ்வாறாக வனவிலங்குகளை சுட்டு காயப்படுத்துவது அவற்றை மேலும் மூர்க்கம் ஆக்கும் என்றும், அதனால் பொதுமக்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் வனத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். தோனி யானைக்கு சிகிச்சை மற்றும் பயிற்சி அளித்து அதை கும்கி யானையாக மாற்றும் பணிகள் நடைபெற உள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்களுக்கு மட்டுமே கடன் வழங்கும் சிறப்பு வங்கி!