நேற்று சஸ்பெண்ட் ஆன கவிதா இன்று கட்சியில் இருந்து விலகல்.. தெலுங்கானா அரசியலில் பரபரப்பு..!

Siva
புதன், 3 செப்டம்பர் 2025 (18:35 IST)
தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா, தான் சார்ந்த பாரத் ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சிக்கு எதிராக செயல்படுவதாக கூறி, சந்திரசேகர ராவ் நேற்று அவரை கட்சியில் இருந்து நீக்கிய நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், கவிதாவை நேற்று சந்திரசேகர ராவ் கட்சியில் இருந்து நீக்கியதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, இன்று  கவிதா தான் கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
 
மேலும், தெலுங்கானா சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்ய இருப்பதாக அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
கவிதாவின் இந்த முடிவு, தெலுங்கானா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு, குடும்பத்திற்குள் ஏற்பட்ட அரசியல் பிளவு அல்லது கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments