Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதுக்கெல்லாம் சப்போர்ட் பண்ணுனா நான் மனுஷனே கிடையாது! - நாய் பிரியர்களை கிழித்த நடிகர் அருண்!

Advertiesment
Actor arun

Prasanth K

, புதன், 3 செப்டம்பர் 2025 (15:35 IST)

சமீபத்தில் தெருநாய்கள் மனிதர்களை தாக்குவது தொடர்பான நீயா நானா நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, நிலையில் தங்களுக்கு ஆதரவாக வீடியோ போடுமாறு நாய் பிரியர்கள் கேட்டதாக ஜனநாயகன் பட நடிகர் கூறியுள்ளார்.

 

நாளுக்கு நாள் தெரு நாய்களால் மக்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், அவற்றை ஷெல்டர்களில் அடைப்பது போன்ற தீர்வு நோக்கிய பாதையில் நாய் பிரியர்கள் முட்டுக்க்கட்டையாக இருக்கின்றனர். இது தொடர்பாக சமீபமாக நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் நாய்களை கட்டுப்படுத்துவது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள், நாய் பிரியர்கள் இடையே ஏற்பட்ட விவாதத்தை தொடர்ந்து நாய் பிரியர்கள் அதிக அளவில் ட்ரோலுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சீரியல் நடிகரும், தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து வருபவருமான நடிகர் அருண் பேசியுள்ளார். அதில் அவர் “நானும் வீட்டில் நாய் வளர்க்கிறேன் தான். பல பிரபலங்களும் தங்கள் வீட்டில் நாய் வளர்க்கிறார்கள். அதற்காக கண்ணை மூடிக்கிட்டு பேச முடியாது. எல்லாத்துக்கும் ஒரு எல்லை உண்டு.

 

அந்த நிகழ்ச்சிக்கு என்னையும் கூப்பிட்டாங்க. நான் போகவில்லை. போனவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் வலியை புரிஞ்சிக்காம பேசி, இப்ப மக்கள் கொந்தளிக்கவும் எதேதோ சொல்லி சமாளிக்கிறாங்க. அவர்களுக்கு ஆதரவாக வீடியோ போட சொல்லி என்கிட்டயும் கேட்டாங்க. ரேபிஸ் பிரச்சினை தீவிரமாக இருக்கிற இந்த சமயத்தில் நான் நாய்தான் முக்கியம் என்று பேசினால் இந்த சமூகம் என்னை மன்னிக்காது” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!