Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரயில் தண்டவாளத்தில் முட்டாள்தனமான சாகசம்; வைரல் வீடியோ

Advertiesment
ரயில் தண்டவாளத்தில் முட்டாள்தனமான சாகசம்; வைரல் வீடியோ
, புதன், 24 ஜனவரி 2018 (16:40 IST)
சாகசம் என்ற பெயரில் வேகமாக ரயில் செல்லும்போது தண்டவாளத்தில் படுத்துக்கொள்ளும் வாலிபரின் வீடியோ வைரலாகி உள்ளது.

 
சாகசகம் என்ற பெயரில் இளைஞர்கள் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் முட்டாள்தனமான சாகசமாக உள்ளது. பலர் இதில் உயிரிழந்து விடுகின்றனர்.
 
இந்நிலையில் காஷ்மீரை சேர்ந்த ஒருவர் ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்துக்கொள்கிறார். ரயில் வேகமாக செல்கிறது. பின்னர் ரயில் சென்றதும் எழுந்து வருகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று மாலை இந்த வீடியோ பரவ தொடங்கியது. 
 
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா இதனை முட்டள்தனமான சாசகம் என அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த நபருக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 

நன்றி: Jammu Link News

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேசியகீதம் இசைக்கப்படும்போது சுவாமிகள் ஏன் தியானம் செய்யவில்லை!